வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஜோதி ஸ்வரூபம், ஹரி ஹர சுதன், ஐயன் அவனின் லீலைகளை காதுகளால் கேட்பது இன்பம். அதனினும் இனிது அந்த சரித்திரத்தை முத்தமிழோடு கலந்து ரசிப்பது இன்பம். அதனினும் இனிது ஐயனை நேரில் தரிசித்து விட்டு, அவனின் கலையரங்கத்திலே அவனது லீலையை இவள் கைவண்ணத்தில் இல்லை இல்லை, பரதம் என்னும் கலை வண்ணத்தில் காண்பது இன்பம். எப்போதும் போல் வாய்ப்புகளை நழுவ விடாமல், சிட்டென பறந்து வந்தாள் அரங்கிற்கு மீரா.
சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவது போல, இங்கும் ரசிகர்கள் கூட்டம்.. அழையா விருந்தினர் போல உள்ளே நுழைந்தாள் மீரா, தன் இரு குழந்தைகளுடன்.
நிரா, மீராவின் செல்ல பெண். வேறொரு நாட்டிய ஆசிரியரிடம் பரதம் பயின்று வருகிறாள். இருந்தும் sara mam மும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்..
அரங்கத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சோதித்து கொண்டு இருந்தார் sara. Pen drive போட்டாச்சா? All dancers assembled? Projector ல video clips போட்டாச்சா? Properties for dance எல்லாம் எடுத்து வச்சாச்சா? இன்னும் பல tensions. எப்போதும் இதை எல்லாம் Krishna sir தான் பார்ப்பார்..
ஆனா இனி எல்லாமே இவங்க தான்.. சோகங்களை புன்னகையில் மறைத்திருந்தாள்..
Hi mam, என்றாள் மீரா
Hi ma, என்று புன்சிரிப்புடன், கொஞ்சம் ஆச்சரியத்துடன், வாங்க என்று வரவேற்றாள் sara
நாங்க வரலாம் ல, என்று தயக்கத்துடன் மீரா permission கேக்க
கண்டிப்பா, u r always welcome
Thank you so much என்று கூறி ஒரு ஓரமாக நின்று கொண்டாள் மீரா, அமர இருக்கை இல்லாத காரணத்தால்.
ஜெய், மீராவின் செல்ல மகன். எட்டே வயது நிரம்பிய அமுல் baby. குழந்தைகள் என்றாலே பிள்ளையார் போல தொந்தியும் தொப்பையுமாக இருக்க வேண்டும் என்பது rule. ஜெயும் அப்படி தான். கூடவே சில நேரங்களில் தொந்தரவாகவும் இருப்பான்.
அம்மா பசிக்குது, என்றான்
டேய், இப்போ தானே வீட்டுல இருந்து சாப்பிட்டு கிளம்பினோம், என்று கெஞ்சினாள் மீரா
அம்மா வெளியே போலாம், என்று சினுங்கினான்
இப்போது மீராவிற்கு புரிந்து விட்டது.. நிராவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
வீதி முழுதும் சின்ன சின்ன கடைகள். குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருள்கள், baloonகள், சிறு தீனிகள்,மேலும் டீ காபி சைக்கிளில் நின்ற படி விற்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
நாட்டிய நாடகம் தாமதமாகும் காரணம் தெரியவில்லை. எனினும் செவிக்கு உணவு இல்லாத போது கொஞ்சம் வயிற்றுக்கும் ஈயப்படும் என்று வள்ளுவரின் குரல் காதுகளில் ஒலிக்க, கொஞ்சம் சில்லறைகள் கொண்டு மூவரும் சிற்றுண்டியை முடித்துக் கொண்டனர்.
உண்மையில் அவர்கள் மட்டும் அல்ல நிகழ்ச்சிக்கு வந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அங்கு தான் இருந்தனர். இது மீராவிற்கு வியப்பை தந்தது. ஏனெனில் பல முறை ஐயப்பனை அங்கு தரிசிக்க வரும் போது ஒன்று அல்லது இரண்டு கடை தான் கண்களில் பட்டன. இன்று மட்டும் ஏன் இத்தனை கடைகள்? ஒருவேளை ரசிகர்களுக்காக ஐயப்பன் ஏற்பாடு செய்த instant கடைகளோ?
ஆம்! உண்மையில் கோவில், திருவிழா, கலை நிகழ்ச்சிகள் என்று நம் பண்பாட்டு design ஒரு கண்களுக்கு புலப்படாத வர்த்தக மையம் தான்..
இது போல் பாமர மக்களும் பயன் பெறும் வண்ணம், எளிய நிகழ்ச்சிகள் பல sara mam நடத்த வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள் மீரா.
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் purse காலியாகிவிடும் என்று உடனே அரங்கிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றாள்..
ரொம்ப நேரமாக குழந்தையோடு நிற்பதைக் கண்டு, இரக்கத்தோடு ஒருவர் seat கொடுக்க, நிரா ஜெய் இருவரையும் அமர்த்தி விட்டு தான் மட்டும் நின்று கொண்டாள்..
ஐயப்பன் சரித்திரம் தொடங்குகிறது. Projector ல காட்சிகள் போடப்பட்டது.
Write a comment ...