சாரல் - 7

கதவை திறந்தாள் sara. வாங்க வாங்க.

ஒரு நிமிடம் இமைக்க மறந்தன மாயாவின் கண்கள். எப்போதும் சூரியனை பார்த்து தான் தாமரை மலரும். ஆனால் pink green colour sareeயில் செந்தாமரை போல மலர்ந்து இருந்த sara வை பார்த்து சூரியன் போல மிண்ணின இவள் கண்கள்..

U r looking gorgeous in this half saree. Always sweet 16 mam நீங்க. நடனக் கலைஞர்களுக்கே ஆன வரம் என்றாள் மாயா.

சிரித்தாள் Sara. அப்புறம்.

சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ. இவள் செந்தமிழ் தேன் மொழியாள் என்று மாயா situation song பாட

போதும் போதும் உன் பழைய பாட்டை நிப்பாட்டு, என்று cut செய்தாள் mercy.

Old is gold, உனக்கெல்லாம் எப்படி தெரியும் என்று மாயா கடிந்து கொள்ள

ஆராம்பிச்சிட்டிங்களா? என்றாள் Sara

நீ வேணும்னா கேளு, Sara mamக்கு latest and trending song தான் பிடிக்கும் என்றாள் mercy

அப்படியா mam, என்று மாயா வினவ

ஆம் என்பது போல தலை அசைத்தாள் Sara..

Then...hmmm.. என்று யோசித்தவள், கண்ணும் கண்ணும் nokia, நீ கொள்ளை கொள்ளும் mafia, cafeteeno coffeeயா.. sophia... என்று மாயா பாட..

Nice, ஆனா நீங்க அந்தாக்ஷரி பாடவா வந்தீங்க என்று Sara புருவம் உயர்த்த..

இல்ல mam, ஆனா pls don't mistake me, ஒரு அழகான பெண் பார்த்த போது கவிதை வரனும்.. but வரலையே.. so கவிதையா ஒரு song..

போதும் ஐஸ்..., உட்காருங்க. I will get you something to drink... என்று Sara கிட்சன் செல்ல

அறையை நோட்டம் இட்டுக் கொண்டு இருந்தாள் மாயா. Beautiful home இல்ல mercy mam. Dancers pictures, வீட்டையும் ஒரு கலைக்கூடம் போல வச்சு இருக்காங்க..

ஹ்ம்ம்..

கொஞ்ச நேரத்தில் Sara டீயுடன், பஜ்ஜியும் கொண்டு வந்து கொடுத்தாள் இருவருக்கும்..

வாங்கி குடித்தாள். பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டே Mercy mam, பொண்ணு புடிச்சு இருக்கா இல்லையான்னு ஊருக்கு போய் லெட்டர் போடுறேன்னு சொல்லுங்க என்றாள் மாயா.

சிரித்தாள் Sara.

இங்க என்ன பொண்ணு பார்க்குற scene ஆ நடக்குது. நிறைய படம் பார்த்தால் இப்படித்தான் என்றாள் mercy.

நான் கூட அப்படித்தான் நினைத்தேன் என்றாள் Sara

இருவரும் ஒரு முகமாக saraவை பார்க்க

வாங்க என்று குரல் கொடுத்தாள்..

அருகில் இருந்த அறை திறந்தது.

கிருஷ்ணா sir வந்து அமர்ந்தார்..

இந்தாங்க... டீயும், பஜ்ஜியும் எடுத்துக்கோங்க என்றாள் Sara

Thanks, என்று கூறி வாங்கி கொண்டார்

அழகிய மஞ்சள் நிற சர்டும், ப்ளூ ஜீன்ஸ்ம் அணிந்து இருந்தார்.

ஒரு வேளை இந்த சூரியனுக்காக தான் தாமரை மலர்ந்து இருந்ததோ? என்றாள் mercy

ஆம் என்பது போல் தலையசைத்தாள் மாயா.

மெல்லிய புன்னகையுடன் Sara..

சின்ன நிசப்தம் நிலவியது. ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றனர் சிறிது நேரம்.

Engagement and wedding dresses எடுக்க போறோம், also some wedding purchases. அதனால அவரு ஊரிலிருந்து வந்து இருக்காரு. ஒரு surprise ஆ இருக்கட்டும் ன்னு உங்க கிட்ட சொல்லல, என்றாள் Sara.

Oh..ok mam

இது அந்த பொண்ணு தானே. அன்னிக்கு சாரல் மழைல நனைந்து கொண்டு இருந்தது, என்று saraவை பார்த்து வினவ

ஆமாம், very childish and naughty too என்றாள் sara..

இல்ல, என்பது போல‌ தலை அசைத்தாள் மாயா. கொஞ்சம் சுதாரித்து கொண்டு, சரி சொல்லுங்க சார் உங்க ஊர் special என்ன?

இதோ. இந்த டீயும் பஜ்ஜியும்.. பல பேரோட வயிரை நிறைத்து விடும்..

So Sweet... என்றாள் மாயா..

Hmmm..என்றார் கிருஷ்ணா sir

உங்களுக்கு சமைக்க தெரியுமா? தேவை பட்டா sara mamக்கு சமைத்து தருவீங்களா? என்றாள் மாயா

ஹே மாயா, என்று அவள் கையை பிடித்து அழுத்தினாள் mercy..

அவ ஏதோ possessivenessல கேக்குறா என்று saraவும் கூற

இருக்கட்டும்.. விடுங்க என்றார் கிருஷ்ணா sir. Chennaiல bachelor life. கொஞ்ச நாள் நான் சமைத்து சாப்பிட்டேன். இனிமே என் wife, my partner .. நான் நல்லா பார்த்துக்குவேன்..

Thank you so much, என்று மனதார நன்றி தெரிவித்தாள் மாயா

வேற ஏதாவது..

கேட்பேன், தப்பா எடுத்துக்க கூடாது..

ஹ்ம்ம், கேளுங்க..

Sara mam, ஒரு good dancer and also a choreographer. She is going to be ur professional partner too. So உங்க choreography எப்படின்னு நான் பார்க்கலாமா? இப்போ.. என்றாள் மாயா

இதை சற்றும் எதிர்பாராத sara, விழித்தாள்...

சிரித்தார். சரி பாட்டு சொல்லுங்க...

ஒரு நிமிடம், என்று மாயா யோசிக்க...

ஒரு வேளை கிருஷ்ணா sir கோவித்துக் கொள்வாரோ.. இது என்ன சங்கடம், என்று Saraவும் mercyம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. மாயா சாராவின் கண்களையே பார்க்கிறாள்..

இதோ... பாட்டு என்று‌ தன் phoneலிருந்து ஒரு பாட்டை play செய்கிறாள்...

பார்த்த விழி பார்த்த படி பூத்த இருக்க..

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

என்று பாட்டு ஒலிக்க...

பாட்டை காதில் முழுவதுமாக உள்வாங்கி கொண்டார்.

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க, என்று சொல்லி சிரித்தார். ரசித்தார். சாராவின் கண்களையே பார்த்தார். அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்...

அவரின் கைகள் தாளம் போட, இமை முடி காட்சி படுத்தினார். தன்னுடைய இருவிழிக்கு திரையிட்டு அரங்கேற்றுகிறார் பாடலுக்கு ஏற்ற அபிநயமும், அடவுகளும்...

அனைவரும் அவரை எதிர் நோக்க...

கண்கள் திறந்தன. Play the song என்றார்..

மாயா பாடலை ஒலிக்கச் செய்தாள்..

கிருஷ்ணா sir எழுந்து soloவாக ஆடிய அழகை அனைவரும் கண்டு ரசிக்க, நடனம் முடிந்தவுடன் .. once more pls, but என்று மாயா உரைக்க

அனைவரும் மாயாவை நோக்க...

Mam, ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுங்க, என்று மாயா அவள்(saraவின்) விருப்பத்தை தன் குரலில் ஒலிக்க..

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பேச, பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க என்று மீண்டும் ஒருமுறை நடனம் அரங்கேறியது duetஆக..

Beautiful, made for each other , என்று ஆராவாரத்ததுடன் கைத்தட்டி Saraவை அணைத்துக் கொண்டாள் மாயா..

ஹ்ம்ம்.. என்ற பெரு மூச்சுடன் sofaவில் அமர்ந்தார் கிருஷ்ணா sir...

Mercyயும் அவர்களோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்..

Nice friends, என்றார் கிருஷ்ணா sir..

We miss you so much dear, என்று தேம்பி தேம்பி அழுதனர்...

உண்மையில் ஆண்களின் நட்பு வட்டாரங்கள் நெடுந்தூரம் பயனிக்கும். ஆனால் பெண்களின் நட்போ ஆழ்ந்து விரிந்த உணர்வுகளால் பிண்ணி பினைந்து நினைவில் கலந்த நட்பு

Write a comment ...

Meenakshi Rajeswari

Show your support

தமிழுக்கும் அமுதென்று பேர்! கொஞ்சம் பகிர்ந்து தான் பார்ப்போமே!!

Write a comment ...