மூவரும் அறைக்கு சென்றனர். ஒரு நிசப்தம். வார்த்தைகள் அற்ற மௌன நிலை.
நாளைக்கு program இருக்கு. so சீக்கிரம் தூங்கலாம், good night என்றாள் Sara.. அனைவரும் தூங்க சென்றனர்..
தூங்க தான் சென்றார்கள். இருந்தும் தூக்கம் வரவில்லை.
அந்த நேரத்தில் escape ஆகிவிட எண்ணி, யோசிச்சு சொல்லறேன் என்று சொல்லிட்டேன். இது sara.
கிருஷ்ணா.. இவர் இந்து மதம் சேர்ந்தவராக இருக்கலாம் என்று யோசித்தவாரு mercy தயங்க
No, முடியாது என்று Sara mam சொல்லி இருக்கலாம் என்ற கவலையில் மாயா
மாயா, என்று அழைத்தாள் Sara
ஹ்ம், சொல்லுங்க mam
தூங்கிட்டியா?
ஆமாம் என்றாள் மாயா
அப்புறம் எப்படி பேசுற என்று சிரித்தாள் mercy..
தூங்கிட்டே பேசுறேன்..
இதுக்கு என்ன அர்த்தம்? என்று Sara வினவ
பின்ன, யோசிச்சு சொல்லுறேன் .. அதுக்கு என்ன அர்த்தம்
புடிச்சு இருக்குனு அர்த்தம் என்றாள் mercy
இல்ல இல்ல, என்று தவித்தாள் sara
Sir அழகா இருக்கார். உங்களுக்கு matching தான். கிருஷ்ணா, பேரு double ok, என்றாள் மாயா
அது போதுமா? எவ்வளவு earnings இருக்கும்? என்றாள் mercy
Chennaiல dance school ன, சும்மாவா? வீடு கார் னு settle ஆயிருப்பாரு, என்று குதூகலத்துடன் மாயா எழுந்து உட்கார
ஆமாம் ஆமாம், என்றாள் mercy, after marriage, vacation க்கு Chennai போலாம், shopping போலாம் என்று husky voiceல் கூறினாள் mercy
Kerala கூட போலாம் mam, boat house செம்மையா இருக்கும் ல என்று மாயா தொடர
டேய், இங்க நான் ஒருத்தி இருக்கேன் என்று பதட்டத்துடன் sara, முற்று புள்ளி வைக்க
Yes mam, என்று ஒரே choresல் mercyயும் maya வும்..
எனக்கு இந்த love marriage ல எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை, also family commitments and... என்று Sara இழுக்க.
மாயா மெல்ல அவள் அருகில் சென்றாள். Sara mam no confusions. Just take a deep breath and அவள் கையை பற்றிக் கொண்டாள். Saraவின் இதயத்துடிப்பை அவளின் விரல் நுனியிலும் உணர்ந்தாள் மாயா.
உங்களுக்கு ஒண்ணு சொல்லவா sis, என்றாள் மாயா
ஹ்ம்ம், என்றாள் Sara
இந்த ப்ரபஞ்சம் ஒரு அழகான ரகசிய ஆற்றல் கொண்ட அனைவருக்கும் பொதுவான பொக்கிஷம். உங்களை அது கவனிக்கிறது . உங்கள் ஆசையை அது பூர்த்தி செய்ய உதவுகிறது, என்று மாயா தொடர
புரியலையே என்றாள் mercy
நல்லா உற்று பாருங்க mercy mam, Sara mam ஒரு passionate dancer, responsible and dedicated lady too. Krishna sirம் அப்படித்தான் இருக்காரு. When he proposed நீங்க கவனிச்சு பார்த்தீங்களா.
ஹ்ம்ம்
Actualல sir propose பண்ணுற மாதிரி இருக்கு, ஆனா உண்மையிலேயே இந்த ப்ரபஞ்சம் உங்களுக்கு ஒரு நல்ல life partnerயை suggest பண்ணுது. You can accept or deny and wait for another proposal.. so choice is yours. நீங்க decide பண்ணுங்க sister.. நீங்க சம்மதம்ன்னு மனசுக்குள்ள சொன்னாலும் போதும் இந்த ப்ரபஞ்சம் உங்களை அழகாக வழி நடத்தும் என்றாள் மாயா
ஹ்ம்ம்
இப்போ தூங்க போலாமா? என்றாள் மாயா
Yes, என்றனர் mercyயும் Saraவும். Good night dear
அங்கு கிருஷ்ணாவும் அமைதியாக அறையில் படுத்து இருந்தார். தூக்கம் வரவில்லை. ஏன் அவ்வாறு கூறினேன் என்று யோசித்தார். He regretted for a moment. ஆனால் அவர் ஆழ்மனதில் இருந்த- அவர் miss பண்ண தாயின் அரவணைப்பை இந்த ப்ரபஞ்சம் அவள் மூலம் மீட்டுத் தர முயலுகிறதோ? காமாட்சி அம்மனையும் தன்னுடைய அம்மாவையும் மனதார நினைத்தார். கொஞ்சம் நேரத்திலேயே கண்ணயர்ந்தார்.
புத்தம் புது காலை. பனிமூட்டம் நிறைந்து இருக்கும். ஆனால் மிக தெளிவாக இருந்தாள். பளிச்சென்று ஒரு கருநீல நிறத்தில் cotton saree with sandal border உடுத்தி இருந்தாள். Simple antique touch and with a smile என மாயா முன் தோன்ற.
Sara mam... So sweet, you are gorgeous mam, என்றாள் மாயா, என்ன மனசுக்குள்ள சம்மதம் சொல்லிட்டீங்களா? என்று இழுக்க
சிரித்தாள்.. இல்ல மாயா. அதை இந்த ப்ரபஞ்சம் பார்த்துக்கும். இப்போ வாங்க நம்ம வேலையை நாம பார்க்கலாம்... என்று இருவரையும் அழைத்துக் கொண்டு stageக்கு சென்றாள்.
Event went well today also..
Evening ஆயிடுச்சு, everyone vacated the room, and about to leave
Krishna, மீண்டும் Sara வை பார்க்க வந்தார்.
Mam
சொல்லுங்க சார்
நேத்து கேட்டதுக்கு reply எதுவும் இல்லையா?
Sir, நீங்க என் parents கிட்ட தான் கேக்கனும்
Yes I agree. என்னோடு வந்தவர்களை நான் safeஆ Chennai ல விட்டுட்டு ஒரு நாள் வரேன். Take my mobile number. எப்போ convenient time nu சொல்லுக. பார்க்கலாம். பேசலாம்.
Ok, I will text you.. have nice journey, என்றாள் Sara
Byee, mam என்ற சிறு புன்னகையுடன் கிருஷ்ணா
Write a comment ...