மாய மோஹினி

அவளின் நேத்திரங்கள்...

நேர்த்தியாக பல மணி நேரம் செலவிட்டு பிரம்மன் படைத்தானோ. விழிகளுக்கு அடிக்கோடிட்ட அஞ்சனம் சொல்லாமல் சொல்லியது, அவள் பார்வையின் முக்கியத்தை நீ நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்று. அவளின் கடைக்கண் கடாக்ஷமே பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாக உள்ளுர பாய்ந்தது..

இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர்...

அவரவர் பங்கு போட்ட பின், அவசர அவசரமாக எஞ்சி இருக்கும் ஏரியை அரசு வேலி போட்டு பாதுகாத்து கொடுக்க... எல்லைக் கோட்டில் பல வளைவுகளும், நெலிவுகளும் காணப்பட்டாலும், புது பொலிவுடன் நின்றது அந்த ஏரி... சித்தம் நித்தம் அவளை நாடும் அந்த கரையின் மேலே... ஆம்... பலரின் எர்லி மார்னிங் வாக் அங்கே தான்..

*

Next scene - at mohini's home

அழைப்பு மணி ஒலித்தது... ஒரு என்பது வயது தக்க பெண்மணி கதவை திறந்தார்.

உங்களுக்கு யார் வேணும்?

மோஹினி? மோஹினி வீடு தானே...

ஆமாம். நீங்க

அவங்க friend.. இருக்காங்களா?

இருக்காங்க... வாங்க உள்ள வாங்க.. இதோ.. இந்த அறையில் படித்து கொண்டு இருக்கிறாள் என்று கூறி விட்டு, சமையலறை சென்று விட்டார். அவர் வேரு யாரும் இல்லை மோஹினின் அம்மா

கதவை திறந்து உள்ளே சென்றாள் மாயா..

ஹே மாயா, பார்த்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்க என்று மோஹினி முடிப்பதற்குள்

மோஹினியை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டாள் மாயா, கண்களில் நீர் வழிய

பிரிவின் ஆற்றாமையை ஆசுவாச படுத்திக் கொள்ள சில வினாடிகள் ஆனது மாயாவிற்கு.

ஹே மாயா... நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க, என்று சிரித்தாள் மோஹினி

இருந்துட்டு போறேன்... என்று சினுங்கலுடன், கண்களை துடைத்துக் கொண்டாள்

ரொம்ப நாள் கழித்து பார்க்கும் போது, சிரித்து முகத்துடன் இருப்பாய்ன்னு நினைத்தேன்.. ஆனா நீ ஒரு அழுமூஞ்சி என்று மேலும் சீண்டினாள் மோஹினி

வீடு காலி பண்ணும்போது எனக்கு சொல்லனும்ல, எப்படி தேடி கண்டுபிடித்தேன் தெரியுமா?

நீ touchலையே இல்ல.. ஆனா என் தொலைபேசி எண் நான் மாற்றலையே? என்று மோஹினி வினவு

உங்கள பார்க்க பழைய வீட்டுக்கு போயிருந்தேன். நீங்க காலி பண்ணிட்டு போனதா சொன்னாங்க.. so அவங்க கிட்ட புது address வாங்கி, உங்களுக்கு surprise கொடுக்கலாம்னு நினைத்தேன், என்றாள் மாயா

ஹ்ம்ம்

அப்புறம் எப்படி இருக்கீங்க, ஏன் வீடு மாறிடீங்க என்று கேட்டு முடிப்பதற்குள்

மோஹினி பாலாவின் படம் அருகே பார்வையை திருப்ப

மாயாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.. sorry sis, என்னாச்சு?எப்போ? என்று மாயா கேள்விகளை அடுக்கிச் செல்ல

It's ok மாயா, just leave it, நிறைய அழுதாச்சு. அவருக்கு உடம்பு சரியில்லை, நிறைய treatment பண்ணோம். But காப்பாற்ற முடியல. யாருக்கும் சொல்லிக்கல, யாரையும் கஷ்ட படுத்த கூடாதுல என்றாள் மோஹினி தளர்ந்தவளாய்.

சிறிது நேரம் மௌனமாய் மாயா.. விழியோரம் சில கண்ணிர் துளிகள்... துடைத்துக் கொண்டு மெல்ல அவளின் குரலில் கொஞ்சம் உற்சாகத்தை வர வழைத்துக் கொண்டு, dance school எப்படி போது

ஹ்ம்ம் fine, பாலா போனதுக்கு அப்புறம் கொஞ்சம் கஷ்டப் பட்டேன்.. இப்போது ஒர் அளவு manage பண்ணிட்டேன்.. சரி நீ என்ன பண்ணுற சொல்லு என்றாள் மோஹினி

நான் as usual... சிரிச்சுட்டே சொன்னால் மாயா

But, I miss you...

Miss... What?

Miss ur கவிதைகள், இல்ல கிறுக்கல்கள் என்றாள் மோஹினி

True.. நானும் தான்.. கண்ணணோடு கறையும் தருணங்களை miss பண்ணுறேன்.. எழுதுறதே இல்ல என்றாள் மாயா

ஏன்?, என்று வினவியவளிடம்

சரி இப்ப ஒண்ணு try பண்ணவா? நீங்க கிறுக்கல்கள் ன்னு சொன்னீங்கள. நீங்களே அடி எடுத்து கொடுக்க... Guess the song... ஓலையும் கிருக்காச்சுதே கிளியே ...உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே...

பல்லவியை புரிந்து கொண்டு மெல்ல அலை அசைத்து, அவளின் தமிழிசைக்காக காத்திருந்தாள் மோஹினி

Song - கண்ணன் திருப்பெயரை

Ragam - செஞ்சுருட்டி

கண்ணன் திருப்பெயரை

உதட்டளவில் சொன்னாலும் (2)

உள்ளம் குளிருதடி கிளியே

உயிரும் உருகுதடி கிளியே

மனமோஹன கண்ணனிற்கு ஆசையாய் காத்திருந்தேன்(2)

நிலவும் போனதுடி கிளியே

பகலவன் வந்தானடி கிளியே

மாடுகன்று மேய்த்துக் கொண்டு

கோகுலத்தில் சுற்றித் திரியும் (2)

யசோதை செல்வமடி கிளியே

பரமன் இங்கு பாமரனே கிளியே

பரமன் இங்கு பாமரனே கிளியே

வெண்ணெய் திருடிடுவான்

உன்னையும் திருடிடுவான்(2)

கார்மேக வர்ணணடி கிளியே

கோபிகை கள்வனடி கிளியே

கண்ணன் திருப்பெயரை

உதட்டளவில் சொன்னாலும் (2)

உள்ளம் குளிருதடி கிளியே

உயிரும் உருகுதடி கிளியே

(உள்ளம் கவர்ந்திருப்பான்)

(நிரந்தரம் இல்லா இப்புவி மீது

நிரந்தரமாக என்னுள் உறைபவன்)

Nice. ஆனா காவடி சிந்து கந்தனுக்கு தானே, என்று சிரித்தாள் மோஹினி

ஏன், காவடி சிந்து கண்ணனுக்கு இல்லையா? ஒரு இடத்தில முருகரே பெருமாளாக வந்து தன்னுடைய கருணையை காட்டி இருப்பாரு, என்றாள் மாயா confidentaaaa

எந்த புராணத்தில், என்று மோஹினி புருவம் உயர்த்த

படிச்சு இருக்கேன் sis, ஆனா..

எங்கன்னு தான் மறந்துட்டுல, என்று சிரித்தாள் மோஹினி. நீண்ட நாட்களுக்கு பின் தன்னை மறந்து விழுந்து விழுந்து சிரித்தாள்

ஹ்ம்ம், என்று முகத்தை அப்பாவியாக வைத்திருந்தாள் மாயா, பார்ப்பதற்கு சின்னஞ் சிறு பெண் போலே

சரி, இரு உனக்கு coffee கொண்டு வரேன், என்று கூறி மோஹினி அவ்விடத்தை விட்டு நீங்கினாள் மனதில் ஒரு கேள்விக் குறியோடு

பாலாவின் படத்தை பார்த்து கொண்டு இருந்தாள் மாயா. அவளை அறியாமல் கண்களில் நீர் அருவியாக கொட்டியது.. ஒரு இனம் புரியாத மனவருதத்தில் மூழ்கினாள்.

Coffeeயுடன் வந்த மோஹினிக்கு, இப்போது அவளின் கேள்விகான விடை கிடைத்தது...

ஏ, மாயா என்றாள்

ஹ்ம்ம் சொல்லுங்க sis, கண்களை துடைத்துக் கொண்டு

ஹ்ம்ம்

Don't mistake me. பெரும்பாலும் பிறப்பு இறப்பு என்னை பெரிதாக பாதிப்பதில்லை. எனினும் நீங்கள் பாலாவின் அர்தாங்கினி. அவரின் பிரிவு உங்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தியிருக்கும். அந்த மனவருத்தமே என்னையும் கொஞ்சம் பாதித்து இருக்கும்..

ஹ்ம்ம், என்று coffeeயை நீட்டினாள்

Thanks sis

Write a comment ...

Meenakshi Rajeswari

Show your support

தமிழுக்கும் அமுதென்று பேர்! கொஞ்சம் பகிர்ந்து தான் பார்ப்போமே!!

Write a comment ...