ஐயப்பன் சரித்திரத்தின் முன்னோட்ட கதை முதலில் projectorல் திரையிடப்பட்டது. அரக்கி மகரிஷியின் கொடுமைகள் தாங்காமல் தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். மகிஷியை வதைத்து, தேவர்களை ரஷிக்க ஹரி ஹர புத்திரனாக ஐயப்பன் தோன்றும் காலம் வந்துவிட்டது என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினர்.
முதலாவதாக, நீர் கொடுத்த வரத்தை உன்னிடமே சோதித்து பார்க்கிறேன் என்று பஸ்மாஸுரன் துரத்த, பரமேஷ்வரன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சி. தாளத்தோடு ஆடத்த துவங்கினர். ஈசனும் இங்கு அழகாக ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.
ஹரியும் கொஞ்சம் நேரம் ஹரனின் ஆட்டத்தை ரசித்துவிட்டு, மோஹினியாக உள்ளே நுழைகிறார். வென்னிற ஆடையில், மின்னும் ஆபரணங்களும், கார் குழலும் மல்லிகை மலரும், இடையில் ஒட்டியானமும், கைகளில் வளையல் குலுங்க, கால்களில் சலங்கை ஒலிக்க பார்பதற்கு ரம்மியமாய்...
மீராவிற்கு கண்ணன் என்றால் பிடிக்கும். அதுவும் கள்வனின் மோஹினி அவதாரம் என்றால் கொள்ளை பிரியம். உடனே தன்னுடைய mobile phoneலிம் மனத்திரையிலும் பதிவு செய்து கொள்கிறாள்..
பஸ்மாஸுரனை இடைமறித்து நின்றாள் மோஹினி. சம்மோஹன கண்ணன் - இந்த மோஹினியின் அழகில் மயங்காதார் உண்டோ? இப்புவி மீது. அசுரன் அனைத்தும் மறந்து மோஹினி பின் சென்றான். ஈசன் தப்பித்துக் கொண்டார்.
பெண்ணே, நில். இத்தனை அழகாக இருக்கும் உன்னை நான் மணம் செய்ய விரும்புகிறேன் என்று அசுரன் அபிநயம் பிடிக்க
என்னோடு நடனமாடி என்னை வெல்க என்று மோஹினியும் அபிநயம் பிடிக்க
மேடை கொஞ்சம் சிறியதாக இருந்தாலும், அசுரனும் மோஹினியுமாக வந்த குழந்தைகள் போட்டி போட்டு கொண்டு அழகாக ஆடிமுடித்தார்கள். போட்டியின் இறுதியாக அசுரன் தன் கரத்தை தன் சிரசில் வைத்து தன்னைத்தானே பஸ்பம் ஆக்கிக் கொண்டான்.
அடுத்த காட்சியாக ஈசனும் மோஹினியும் ஆனந்த தாண்டவம் ஆட, அங்கு காட்டில் ஐயப்பன் குழந்தையென அவதித்தார்
குழந்தையில்லாத ராஜாவும் ராணியும் அந்த பக்கம் வர, அடர்ந்த காட்டுப் பகுதியில் ஐயப்பனின் அழும் குரல் கேட்டு, அவரை அள்ளி அணைத்து கொண்டனர்.. மணிகண்டன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். வேத ஞானமும், போர்க்கலையும் போதிக்கப் பட்டது.
மகிஷி தன் அழிவை நோக்கி நெருங்கினாள். ஆம் ஐயப்பனை தேடி வருகிறாள்.
பால் மனம் மாறாத சிறிய பாலகனை கண்டு நகைக்கிறாள்.
Camera view, stage view என்று மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த மீரா ஒரு நிமிடம் திகைத்தாள். அருகில் இருந்தவரிடம் ஐயப்பனாக ஆடும் குழந்தை யார்? என்ன என்று வினவினாள்..
Anjali, sara mam பொண்ணு, என்று பதில் கூறினார்
ஒன்பது வயதே நிரம்பிய அஞ்சலி ஐயப்பனாக அரங்கப்பிரவேசம் செய்தாள்.
முழுதும் புகை மண்டலம். சிவப்பு மஞ்சள் விளக்குகள் மாறி மாறி ஒளி வீச, சிரசில் மணிக்கீரிடமும், சுருண்ட விழும் கேசம் இரு தோள் வரை தவழ, தோளனியாக வங்கியும், அரையில் மஞ்சள் நிறப் பட்டாடையும், இடுப்பில் ஒட்டியாணமும், சிவந்த பாதங்களும், கால்களில் சலங்கையுடன் தக்க திமி தக்க திமி போட்டுக்கொண்டு திரும்பிய அந்த சின்னஞ்சிறு பெண், மீராவிற்கு ஐயப்பனாகவே காட்சியளித்தாள். உண்மையில் என்ன தேஜஸ்.
வடிவான வதனம், வளைந்த புருவங்கள், கருணை கொண்ட கருவிழிகள், படர்ந்த நெற்றியில் அழகிய திலகம், எடுப்பான நாசி, குமிண் சிரிப்பும், படர்ந்த மேனியில் ஆபரணங்களும், கைகளில் வளையல்கள் குலுங்க, இடுப்பில் இரு கைகள் வைத்துக்கொண்டு கம்பீரமாக ஆதி தாளத்தில் ஆனந்த நர்த்தனம் ஆடுகிறாள்.
ஆம், ஆடல் வல்லான் ஹரன் இவரின் தந்தை, காளிங்க நர்த்தனம் புரியும் ஹரி இவரின் தாய். மணிகண்டனின் நடையிலும் அற்புத நர்த்தனம். சரணம் என்ற மகிஷி வந்திருந்தால் அபய கரம் கொடுத்திருப்பான்.
ஏனோ மாறுப்பட்ட அசுர குணம் ஐயனை எதிர்த்து நிற்க, சம்ஹார தாண்டவம் ஆடுகிறான்.. தாளங்கள் வேகமாக முழங்க, ரௌத்திரம் கொண்டு அசுர வதம் நடந்தேறியது.
சிறிது நேர நிசப்தம் மீராவின் இதயத்தில்.. காட்சியுடன் ஒன்றியதால், phoneலிம் கொஞ்சம் ஆட்டம் ஏற்பட, பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டாள்
ஐயப்பனின் அவதார நோக்கம் முடிந்தது. மீண்டும் ஐயப்பன் தன் சின் முத்திரையில் யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாளிக்கும் காட்சி.
கருப்பு வண்ண ஆடை உடுத்தி, துளசி மணி மாலை அணிந்து, தலையில் இருமுடி தாங்கி, சரண கோஷம் செய்து, மனதில் தூய பக்தியோடு குழந்தைகள் ஆடிப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்..
ஏதோ ஒரு மனநிறைவோடு இல்லம் திரும்பினாள் மீரா தன் இரு குழந்தைகளுடன். அவருக்காக அவளுடைய அண்ணா அண்ணி காத்துக்கொண்டு இருந்தனர்.
Sorry, அண்ணி கொஞ்சம் late ஆயிடுச்சு. ரொம்ப நேரம் waiting aaa, தண்ணீர் சாப்பிடங்க, என்றாள் மீரா
இல்ல எங்களோட புதுமனை புகுவிழா next week, invite பண்ண வந்தோம், என்றார் அண்ணா
Sure, அண்ணா கண்டிப்பா வரும்
முகத்தில ஒரு difference தெரியுதே? என்றாள் அண்ணி
என்ன அண்ணி? நான் எப்போதும் போல தான் இருக்கிறேன், என்றாள் மீரா
இல்ல ஒரு excitement, ஒரு overwhelming happiness, என்ன? என்று அண்ணி வினவ
அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணி. அண்ணா புது வீடு கட்டி இருக்காருல அதுதான், என்று கண் அடித்தாள் மீரா.
அந்த ஐயனின் ஆனந்த ஜோதியில் கொஞ்ச நேரம் நீங்களும் லயித்து தான் பாருங்கள் என்று கூறத் தான் நினைத்தாள் மீரா. ஆனால் வார்த்தைகள் அற்ற மோன நிலை. உண்மையில் அந்த blissful moment யை மனதில் பதித்தரப் படுத்தினாள்.
Write a comment ...