சாரல் - 5

இரண்டு மாதத்திற்கு பிறகு..

Sara and mercy இருவரும் மாயாவை பார்க்க அவள் வீட்டுக்கு வருகிறார்கள்.

ஒரு simple ஆன வீடு தான். Upper middle class. வாசல் முன் மல்லிகைப் பந்தல் வளைந்து வரவேற்க, உள்ளே நுழைகிறார்கள்.

Hall sofaவில் அமர்ந்தபடி TV பார்த்துக் கொண்டு நான்கு ஐந்து தோசைகளை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள் with காரச் சட்னி..

சீக்கிரம் சாப்பிட்டு, இந்த பாத்திரத்தை கழுவி போடு, இது அம்மா

ஹ்ம்ம், சரி சரி .. இது‌ மாயா

வாங்க மா.. என்று இருவரையும் வரவேற்தார் அம்மா

எப்படி இருக்கீங்க aunty

நல்லா இருக்கேன்

அதற்குள் மாயா அனிச்சையாக திரும்பி இருவரையும் கவணிக்க

What a surprise, வாங்க mam, வாங்க என்றாள் மாயா..

ஹ்ம்ம்

இதோ ஒரு நிமிடம், வந்துடுறேன் என்று கட கட வென்று மிதி இருந்த தோசையை சாப்பிட்டு விட்டு, kitchen ல் தட்டைப் போட்டு விட்டு, விறு விறு வென்று அருகில் இருந்த அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்

என்னாச்சு, என்று Sara குழப்பத்துடன் வினவ

ஒண்ணும் இல்லை, நீங்க tiffin சாப்பிடுங்க என்றாள் அம்மா

இல்லமா இப்போ தான் சாப்பிட்டு வந்தோம், என்றாள் mercy

சரி, Coffee சாப்பிடுறீங்களா?

சரி மா..

அம்மா coffee போட‌ kitchen சென்றாள்.. போகும் வழியில் மாயா? என்று கூறி கதவை தட்டிவிட்டு சென்றாள்

இருவரும் வீட்டை சுற்றிப் பார்த்தனர். சின்ன சின்ன drawings, பெரிய பெருமாள் படம் ஒரு புறம். வயதான தாத்தா பாட்டி படம் ஒரு புறம். Tv showcaseல் சின்ன சின்ன cups and medals..

மாயா வந்தபாடு இல்லை..

இந்தாங்க coffee, கூடவே‌ marie biscuitsம்‌ serve செய்தாள் அம்மா...

Thanks ma

கதவு திறந்த சப்தம் கேட்டது.. Maya வெளியே வந்தாள். அப்புறம் என்ன special எங்க வீட்டுப் பக்கம் என்றாள். கூடவே அம்மாவை பார்த்து tiffin கொடுக்க வேண்டியது தானே?

வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க, இது அம்மா

இல்லடா சாப்பிட்டு தான் வந்தோம், என்றாள் Sara

ஆமாம் ஆமாம், அதான் பார்த்தோம்ல .. எவ்வளவு வேகமாக தோசை உள்ள போச்சுன்னு. சரி brush பண்ணிட்டு தானே சாப்பிட்ட, என்று கிண்டல் அடித்தாள் mercy

Hello, அதெல்லாம் brush பண்ணிட்டு தான் சாப்பிடுவோம் என்று மாயா பதில் அளிக்க

பேசிட்டு இருங்க என்று கூறி உள்ளே செல்கிறாள் அம்மா. போகும் போது கண்ணாலே கண்டித்து செல்கிறாள் மாயாவை

என்ன என்று Sara mam வினவ

Mercy mam guest ல, பணிவா பேச சொல்லுறாங்க அம்மா, என்றாள் மாயா

ஹ்ம்ம், என புன்முறுவல் பூக்க

Plate ல் இருந்த biscuit எடுத்து Sara mam coffee ல தொட்டு சாப்பிட்டாள் Maya..

நீ வேணும்னா இரண்டு தோசை, kitchen க்கு போய் சாப்பிட்டு வா.. நாங்க கண்டுக்க மாட்டோம் என்று கண்ணடித்தாள் mercy

No mam,வயிரு full ஆயிடுச்சு.. சும்மா biscuit சாப்பிடனும் போல இருந்துச்சு

அப்போ இந்தா என்று mercy தான் குடித்த பாதி coffeeயை நீட்ட

ஐய்ய , என்று பின் சென்றாள் மாயா

ஹ்ம்ம், என்று தலை அசைத்தாள் mercy

இது, engagementக்கு invite பண்ண வந்தோம் என்றாள் Sara

கொஞ்சம் திரு திரு வென விழித்தாள் மாயா.. உடனே mercy mamயை பார்க்க

கிருஷ்ணா sir தான், என்றாள் mercy

இது.. எப்போ .. இல்ல எனக்கு தெரியாம எப்ப பேசி முடிச்சீங்க என்று husky voiceல்‌ saraவை பார்த்து கேக்க‌

நாங்க எங்க முடிச்சோம்.. உன் பாஷைல சொன்னா இந்த ப்ரபஞ்சம் பேசி முடிச்சுது, என்று சிரித்தாள் mercy

ஒரு நிமிடம் மௌனமாய் saraவை பார்த்தாள்.. கொஞ்சம் சுதாரித்து கொண்டு நான் கூட இந்த படத்தில வர மாறி, சண்டை பிரச்சினை எல்லாம் வரும். கிருஷ்ணா sirம் அப்படியே குதிரைல வந்தியத்தேவன் போல வந்து தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவாருனு நினைத்தேன் என்று மாயா இழுக்க

Hello, hello நிறுத்து. வீட்டுக்குள்ளே ஆள் வரதே தெரியாம tv பார்த்தா இப்படித்தான் தோணும். So .. என்றாள் mercy.. sara mam நீங்களே சொல்லிடுங்க

இல்லடா, coming 5th of this month, morning church la engagement, கண்டிப்பா வரணும் என்றாள் Sara

Ok mam, ஒரு நிமிடம் அம்மாவை கூப்பிடுறேன்.. அம்மா.. அம்மா

அம்மா வருகிறார்..

அம்மா, எனக்கு engagement, நீங்க எல்லாம் familyயா வந்து என்னை bless பண்ணணும்

கண்டிப்பாக வரோம் மா

சரிமா நாங்க கிளம்புறோம் என்று கூறி Sara முன் செல்ல, மாயா அவளை பின் தொடர்ந்தாள்

Mercyயை மட்டும் ஒரமாக அழைத்து, உன்கிட்ட ஒண்ணும் கேக்கனும் பாப்பா என்றாள் அம்மா

சொல்லுங்க மா

மாயா is very good girl, அப்போ அப்போ சண்டை போடுவாள் தவிர, எந்த பிரச்சனையும் இல்லை

சரி மா

நல்லா படிப்பா

சரி மா

நல்லா சாப்பிடுவா

சரி மா என‌ சிரித்தாள் கொஞ்சம் குழப்பத்துடன்

முன்னெல்லாம் biriyani, chicken 65, ன்னு எல்லாமே வெலுத்து வாங்கும்

ஓ. அப்படியா, ஆச்சரியத்துடன் mercy

இப்போ எல்லாம், சுத்தமா vegetarian ஆயிட்டா. Cake ல முட்டை போட்டா கூட சாப்பிட மாட்டேங்குறா.

சரி மா

கேக்குறேன்னு தப்பா நினைக்காதே.. யாராவது ஐயர் பையனை love பண்ணுறாளா?

அட... உங்க பொண்ணா. அதெல்லாம் love எல்லாம் இல்லமா, என்றாள் mercy. வேணும்னா check பண்ணி சொல்லுறேன்

சரி‌ மா. நான் கேட்டேன்னு அவகிட்ட சொல்லிடாத...

சரி மா. நான் பார்த்துக்குறேன், என்று கூறி கிளம்பினாள் mercy

வெளியே நின்று இருந்த இருவரும், என்ன என்பது போல் கை அசைக்க

அடுத்து, Mayaக்கு‌ எப்போ கல்யாணம் பண்ணுறது பத்தி பேசிட்டு இருந்தோம் என்று கண்ணடித்தாள் mercy

நீங்க முதல்ல கிளம்புங்க என்று இருவரையும் வழி அனுப்பினாள் மாயா

Write a comment ...

Meenakshi Rajeswari

Show your support

தமிழுக்கும் அமுதென்று பேர்! கொஞ்சம் பகிர்ந்து தான் பார்ப்போமே!!

Write a comment ...