சாரல் - 3

Sara, துரு துரு என இருக்கும் இருபது வயதை கடந்த இளம் பெண். மா நிறம், வளைந்த புருவங்கள், கரு விழிகள், சுருள் சுருளான கேசம் தோள்களை தாண்டி அலை அலையாய். அவள் பெயருக்கு ஏற்றார் போல் little princess of her family. Post graduation in people's relation and computer applications.

அன்று, காமாட்சி அம்மன் கோவிலில் இரண்டு நாட்கள் Hosur natiyananjali. Event organiserஆக Sara. Neatly ironed cotton saree in green colour with golden yellow border, Simple antique and pink strap titan watch, mild lipstick, கழுத்தில் incharge tag போட்டுக்கொண்டு busy ஆக schedule பார்த்துக் கொண்டிருந்தாள். கூடவே இரண்டு தோழிகள் துணைக்கு.

Krishna, சென்னை வாழ் Kerala thu இளைஞன். பரத கலை ஆசிரியர். Hosur natiyananjali program ku முன்பதிவு செய்திருந்தார். ஐந்து குழந்தைகளுடன்‌ காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். மஞ்சள் நிற பைஜாமாவும், ப்ளூ jeansம் அணிந்திருந்தார். தன்னுடைய slot time காக காத்துக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் தங்கள் குருவின் பாரம்பரிய கலையை அழகாக மேடை ஏற்றி, பலருடைய கைத்தட்டல்களும் ஆசியும் பெற்றனர். வானவரும் ஆசிர்வதிப்பது போல கூடவே கொஞ்சம் மழைச்சாரலும் தூவ, stage அருகில் இருந்த அனைவரும் corridor ல் தஞ்சம் அடைந்தனர்.

மாயா, Sara வின் junior cum friend மழையை பார்த்ததும் அங்கிருந்து மெல்ல நழுவி சாரலில் நனைய தொடங்கினாள். மழையின் காரணமாக கொஞ்ச நேரம் நாட்டிய நிகழ்ச்சிக்கு இடைவேளை விடப்பட்டது. Saraவிற்கு மாயாவின் மேல் ஒருவித பிரியம். Junior ஆக இருந்தாலும் பல நேரங்களில் அவளுடைய மழலை மொழியில் நனைய விரும்புவாள்.

மாயா, pls check if anyone need anything, என்று கூறினாள் Sara

பதில் எதுவும் வராத காரணத்தால், அனைத்து arrangements தானே முன்னின்று கவனித்தாள்.

மழையை கண்டதும் இந்த தோகை மயில் எங்காவது தண்ணீரில் ஆடிக்கொண்டு இருக்கும், என்று எண்ணியவாரு மெல்ல அவளை தேடினாள் Sara.

ஒரு மரத்தின் அடியில் மழைச்சாரலை வாங்கி இலைகள் சிந்தும் நீர்த்துளிகளோட விளையாடிக்கொண்டு இருந்தாள் மாயா. Writing pad யை தலைக்கு குடையாக்கி மாயாவிடம் சென்றாள் Sara

Strictஆக இருக்கும் seniorயை பார்த்ததும் கொஞ்சம் பதட்டத்துடன், sorry sis இதோ வந்துட்டேன் என்றாள் மாயா

எதுக்கு வந்துருக்கோம்? Event என்னாச்சு? எதாவது நியாபகம் இருக்கா?

Sorry, sorry என்று கெஞ்சிய மாயாவின் அருகில் சென்ற Sara, தன்னுடைய saree முந்தானையால் தலை துவட்டி, சலிப்பிடிக்கும்ல என்று புருவம் உயர்த்த

இல்ல, sis I coming, என்று கூறி இருவருமாக stageக்கு வர, மழையும் நின்று இருந்தது

Yes, Sara is very strict and perfect in her job. At the same time, ரொம்ப அன்பானவளும் கூட. மாயாவும் எப்போதும் saraவின் அரவணைப்பிலேயே இருக்க விரும்புவாள்..

இந்த காட்சியை கிருஷ்ணாவும் கவனிக்க தவறவில்லை.

மீண்டும் நிகழ்ச்சி தொடங்கி, இனிதாக இரவு வரை‌ முடிந்தது. அவரவருக்கு தந்த அறைகளில் நாட்டிய ஆசிரியர்களும், குழந்தைகளும், பெற்றோர்களும் ஓய்வெடுத்தனர்.

கிருஷ்ணாவிற்கு Saraவை மிகவும் பிடித்து இருந்தது. இன்று அவர் கண்ட காட்சி, தன்னுடைய அம்மாவை அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்தியது. தான் சிறு பிள்ளையாக இருக்கும் போது மழையில் நனைந்து வீட்டுக்கு வரும் போது எல்லாம், முந்தானையால் துவட்டி விட்ட நினைவுகள் அவர் நெஞ்சில் எழ, மெல்ல அறையை விட்டு வெளியே வந்தார்.

கிருஷ்ணாவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.

பதினைந்து வயது நிரம்பிய பாலகன். அம்மாவின் அரவணைப்பை விட்டு கொஞ்சம் விலகி நிற்கும் விடலைப் பருவம். அரும்பு மீசை எட்டி பார்க்கும் விடலைப் பருவம். ஆனால் அத்தனை சிறு வயதில் எத்தனை பெரிய விருட்சமாய் மனதில் அரும்பிய காதல் கலைக்காக. ஆம் பூர்வ ஜன்ம வாசனையோ? இல்லை ஆடல் வல்லானின் அருட் செல்வமோ? யார் அறிவார். எப்போதும் போல் எதிர்ப்புகள் பல வந்தாலும், தன் இதயத்துடிப்பான பரதம் பயில சென்னைக்கு புறப்பட்டது இந்த யசோதையின் இளஞ்சிங்கம்..

பலப் போராட்டங்களுக்கு பின்னரே வாகை சூடி நடன கலைஞராக வளர்ந்து இருந்தார். இருந்தும் பல நேரங்களில் அம்மாவின் அரவணைப்பை miss பண்ணியதற்கு வருந்தினார், தன்னை அறியாமலேய கண்களில் நீர் துளிகளும் வழிந்தோடியதும் உண்டு.

அருகில் இருந்த அறை event organiser க்காக ஒதுக்கப் பட்டு இருந்தது. Sara, Maya and mercy மூவரும் அங்கு தங்கியிருந்தனர்.

Mercy mam, இன்னிக்கு உங்களுக்கு சாப்பாடு set ஆச்சா என்று சிரித்தாள் மாயா..

Hello, என்ன.. junior நீ .. அத மறந்திடாத, என்று கடிந்தாள் mercy.

ஆம், இன்னிக்கு சாம்பார் சாதம், vegetable rice, curd rice னு vegetarian food. Mercy and Sara both are nonveg lovers.. Maya is vegetarian. Sara பெரும்பாலும் இவர்கள் சண்டையை கண்டு கொள்வதில்லை. அது அடிக்கடி நடப்பது தான்.

Maya மெதுவாக இரும்பினாள்.. ஹ்ம். ஹ்ம் என்று கர கரத் தொண்டையை சரி செய்தாள்.

என்ன பார்த்து சிரிச்சா அப்படி தான் நடக்கும் என்று நகைத்தாள் mercy.

Mercy plz, என்றாள் Sara. Tablet போடுரியா? Fever இருக்கா என்று நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தாள்..

Mercy ... என்று அழுத்தமாக கூறிவிட்டு... உனக்கு யார் இந்த பேரு வச்சாங்க? கொஞ்சம் கூட உனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்ல, என்று வசுவு கூறினாள் மாயா

Sara mam, உங்களுக்காக பார்க்குறேன், என்றாள் கோபமாக mercy

ஒருவேளை பேர்லயாவது இருக்கட்டும்ன்னு வச்சு இருப்பாங்க, என்று மீண்டும் சீரினாள் மாயா

Maya, enough, என்றாள் Sara. Pls mercy கொஞ்சம் நேரம் corridor ல wait பண்ணு நான் வரேன் ..

Ok mam, என்று அவ்விடத்தை விட்டு நீங்கினாள் mercy.

ஏன் மா? என்று கேட்டது‌ தான் தாமதம். Saraவை அணைத்து கொண்டு அழத் துவங்கினாள் Maya. எப்போது பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறாள்..

Ok leave it. Tablet சாப்பிடுறியா?

வேண்டாம்..

சின்ன பிள்ளையை போல அடம் பிடிக்காத. Ok, நாம வெளியே சின்ன walk போகலாம். அப்படியே ஒரு சுக்கு coffee சாப்பிட்டு வரலாம் , என்று அழைத்தாள் Sara.

ஹ்ம்.. என்று இருவருமாக கிளம்பினர், mercyயையும் அழைத்துக் கொண்டு

Corridorல நடக்க தொடங்கினர். மெல்லிய இருட்டு, சில்லென காற்று தேகம் முழுதும் வீச, Saraவின் கரம் பற்றி நடந்தாள் Maya.

அருகில் இருந்த டீ கடையில் மூன்று சுக்கு காபி order செய்தனர் . ஆவி பறக்க டீ வந்தது. மூவரும் குடித்தனர்.

இதுக்கு அப்புறம் மழைல நனைவியா என்றாள் mercy..

No. என்று தலையசைத்தாள் Maya. Yes. Maya is always health conscious. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் திருமந்திரத்தில் அதிக நம்பிக்கை உடையவள்

But, mercy mam, மழைல நனைத்தாலும் சரி நனையாவிட்டாலும் சரி அடிக்கடி சுக்கு சேர்த்துகிட்டா உடம்பு எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்ல என்றாள் மாயா

Nice, என்றாள் mercy. Sara mam ஏன் அமைதியாக இருக்கீங்க.

ஒண்ணும் இல்லை, போலாம். காலைல சீக்கிரம் எழுந்திரிக்கனும் , work இருக்கு...

Ok mam, என்று அவளை பின் தொடர்ந்தனர்

Corridor ல் நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு Saraவை பார்த்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. பூர்வ ஜென்ம பந்தமோ?

Excuse me, என்று இடை மறித்தார்

சொல்லுங்க சார்.. என்றாள் sara

Tomorrow program ? என்று தடுமாற

As per schedule sir

Pls, ஒரு நிமிடம்.. என்‌‌ பேரு கிருஷ்ணா. My native is Kerala

Ok

நீங்க event நல்லா organise பண்ணுறீங்க.

Thanks

Do you know dance?

Yes

Dance is my passion. Im running my dance school in Chennai

Ok

Can you be the partner of my dance school and my life?

என்ன என்று திகைத்தாள் sara

Sir, என்று escort போல பின் தொடர்ந்த Maya சீர

ஒண்ணும் இல்லை, மாயாவை தடுத்தாள் Sara. Pls sir, understand till now I don't have any idea about it.. pls wait. யோசிச்சு சொல்லுறேன் என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் Sara

Ok mam, என்று தலையசைத்தவாறு அறைக்கு சென்றார் கிருஷ்ணா

Write a comment ...

Meenakshi Rajeswari

Show your support

தமிழுக்கும் அமுதென்று பேர்! கொஞ்சம் பகிர்ந்து தான் பார்ப்போமே!!

Write a comment ...